கரும்பு டன்னுக்கு ரூ.2,100 - தமிழக அரசுக்கு இந்திய ஜனநாயக கட்சி பாராட்டு
சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு வரபிரசாதமாக கரும்பு டன்னுக்கு ரூ.2,100 என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை இந்திய ஜனநாயக கட்சி வரவேற்றுள்ளது.
இது குறித்து இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டி.ஆர்.பச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையி்ல் கூறியிருப்பதாவது,
படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் தனித் திறமையை வளர்த்திடும் வகையில் தமிழக அரசு ரூ.13.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது பாராட்டுக்குரியது. தற்போது 50 லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் இருக்க முக்கிய காரணம் அவர்களுக்கு தனித்திறன் இல்லாதது தான். எனவே அவர்களுக்கு தனித்திறன் பயிற்சி அளிக்கும் இந்த செயலை பாராட்டுகிறோம்.
கரும்பு டன்னுக்கு அரசின் ஆதரவு விலையை ரூ.2,100 ஆக உயர்த்தியதையும் பாராட்டி, வரவேற்கிறோம். இதேபோல கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.10,000. இதர பயிர்களுக்கு ரூ.7,500 நிவாரண தொகையாக வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications