புயல் பாதித்த கடலூரில் பொங்கல் வரை பள்ளிகளுக்கு விடுமுறை-10, 12 வகுப்புகளுக்கு நாளை தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
கடலூர்: தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளைத் தவிர மற்ற வகுப்புகளுக்கு பொங்கல் பண்டிகை வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அமுதவல்லி செய்தியாளர்களிடம் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.
இதனால் தற்போது பள்ளிகள் மூடப்படடுள்ளன. இந்த விடுமுறையானது பொங்கல் பண்டிகை வரை அதாவது ஜனவரி 17ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இது பொருந்தும்.
அதேசமயம், பத்து மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளை முதல் வகுப்புகள் தொடங்கும் என்றார்.












Click it and Unblock the Notifications