எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினருக்கு இலவச தொழிற்பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை: தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து புதிய தொழில் முனைவோருக்கான 'நீங்களும் தொழில் முனைவோராகலாம்' என்ற தலைப்பில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கவிருக்கின்றன.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து புதிய தொழில் முனைவோருக்கான 'நீங்களும் தொழில் முனைவோராகலாம்' என்ற தலைப்பில் அனைத்து மாவட்டங்களிலும் இலவச பயிற்சி அளிக்கிறது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதிற்குட்பட்ட பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு படித்தவர்கள் இந்த இலவச பயிற்சியில் பங்கேற்கலாம். தொழில் முனைவோராக ஆர்வமுள்ளவர்கள் பெயர், விலாசம், கைபேசி, மின் அஞ்சல், கல்வித்தகுதி, சாதி சான்றிதழ், மற்றும் இரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் அந்தந்த மாவட்டத்திலுள்ள, தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மேலாளரிடம் வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications