ஆற்றுக்கால் கோவிலில் தமிழக ஐயப்ப பக்தர்களின் பேருந்து மீது தாக்குதல்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் தமிழக ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து மீது மலையாளிகள் நடத்திய தாக்குதலில் பேருந்து கண்ணாடிகள் சேதமடைந்தன. மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
ராசிபுரம் பக்தர்கள்
ஜனவரி 5-ந் தேதி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து 56 பேர் அடங்கிய அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு புறப்பட்டனர். இவர்கள் 7-ந் தேதி சபரிமலையில் சாமி தரிசனம் முடித்துவிட்டு திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசாமி கோவிலுக்கு ஞாயிறுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு வந்தனர். முன்னதாக அவர்கள் வந்த பேருந்தை ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் அருகே உள்ள வாகன நிறுத்தம் பகுதியில் நிறுத்திவிட்டு, பத்மநாப சாமி கோவிலுக்கு சென்று வழிபட்டனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது பஸ்சின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் தேடுதல்
மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பேருந்தின் கண்ணாடிகளை கற்களை வீசி உடைத்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கல் வீசிவிட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
தொடர்ந்து பஸ்சின் உடைந்த கண்ணாடிகளை மாற்றித் தருவதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் சமாதானம் அடைந்தனர். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம்
இந்த தாக்குதலை கண்டித்து புரட்சிகர தொழிலாளர் கட்சி, இந்திய தொழிலாளர் பேரவை சார்பில் ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் தமிழக பக்தர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளைக காக்கப்பட வேண்டும் என்று முழங்கங்களை எழுப்பினர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications