தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத மாஜி பஞ்சாயத்துத் தலைவருக்கு அடி, உதை!
கிருஷ்ணகிரி: தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறி கிருஷ்ணகிரி மாவட்டம் பொன்னேஸ்வரமடம் பஞ்சாயத்து தலைவரை இளைஞர்கள் சிலர் அடித்து உதைத்துள்ளனர். இதில் அவர் காயமடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகில் உள்ளது பொன்னேஸ்வரமடம். இந்த பஞ்சாயத்திற்கு தலைவராக முனிரத்தினம்மா என்பவர் இருக்கிறார். இந்த கிராம பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் ராமசாமி முத்துரத்தினம்மாவின் கணவராவார்.
ஞாயிறு அன்று ராமசாமியும், அவரது தம்பி மாது மற்றும் முருகன் என்ற மூவரும் கொட்டாவூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த வீரச்சிக்கொட்டாய் பகுதியை சேர்ந்த தருமன், மணிவேல், அன்பழகன் ஆகிய மூன்று பேரும் ராமசாமியிடம், கடந்த முறையும், இந்த முறையும் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வீரச்சிக்கொட்டாயிலிருந்து தாசன்கொட்டாய் வரைக்கும் ரோடு போட்டு கொடுப்பதாக சொல்லித்தான் எங்களிடம் ஒட்டு வாங்கினாய், ஆனால் சொன்னபடி ரோடு போட்டு கொடுக்கவில்லை என்று கூறி தகராறு செய்தனர்.
வெற்றி பெற்றவருக்கும், ஒட்டுப்போட்டவர்களுக்கும் நடந்த வாக்குவாதம் கடைசியில் சண்டையாக மாறியது. தேர்தல் சண்டையில் மக்களிடம் ஒட்டு வாங்கி வெற்றி பெற்ற தலைவரால் நிஜ சண்டையில் வெற்றி பெற முடியவில்லை.
மருத்துவமனையில் அனுமதி
தருமன், மணிவேல், அன்பழகன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து, முன்னாள் தலைவர் ராமசாமியையும், அவரது தம்பியையும் சராமரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் காவேரிப்பட்டினம் காவல்துறை உதவி ஆய்வாளர் அமுதவல்லியிடம் சென்று ஒரு புகார் கொடுத்தார்.
காயம் காரணமாக கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமசாமி.












Click it and Unblock the Notifications