கடலூர் மாவட்டத்தில் மின்சாரம் வர ஒருமாதமாகும்: ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் அழைப்பு
கடலூர்: தானே புயலால் மின் விநியோகம் பாதித்துள்ள மாவட்டங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றாலும் இயல்பு நிலை திரும்ப ஒருமாதமாகும் என்று மின்வாரியம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே சீரமைப்பு பணிக்கு கூடுதலாக 3,000 பேரை திரட்டும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.
முதற்கட்டமாக கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற மின் ஊழியர்கள் 800 பேரை, மின்சார சீரமைப்பு பணிக்கு மின் வாரியம் அழைத்துள்ளது.
தானே புயல் ஆடிய கோர தாண்டவத்தால் கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டத்தில், மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பத்து நாட்களாக சீரமைப்பு பணிகள் நடைபெற்றாலும் கடலூர் தவிர, நடுவீரப்பட்டு சாலையிலுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் சிதம்பரம், பரங்கிப்பேட்டை சாலையிலுள்ள 100க்கும் மேற்பட்ட பேரூர், கிராம பகுதிகளுக்கும், இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை.
ஓய்வு பெற்றவர்களுக்கு அழைப்பு
இந்தப் பகுதிகளுக்கு முழுமையான மின்சாரம் வினியோகம் செய்ய குறைந்தது ஒரு மாதகாலமாகும் என, மின்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் அவர், கூறியதாவது, பொங்கலுக்குள் பெரும்பாலான பகுதிகளுக்கு மின் வினியோகம் தர நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதற்கு தற்போதைய ஆட்களை விட அதிகமாக மின்துறை ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். மற்ற மாவட்டங்களில் உள்ள அனைவரையும் அழைத்து வந்தால், அங்குள்ள பணிகள் பாதிக்கப்படும்.
அதனால், ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை, ஓய்வு பெற்ற மின் ஊழியர்களை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற மின் ஊழியர்கள், 800 பேரை புயல் சீரமைப்பு பணிக்கு வர அழைப்பு விடுத்துள்ளோம்.
இதேபோல், தனியார் மின் நிலையங்கள், மின் கருவிகளுக்கான நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களையும், அவசர பணிக்கு அழைத்துள்ளோம். மொத்தத்தில், இன்னும் 3,000 ஊழியர்களை கூடுதல் பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications