முல்லை பெரியாறு-18ம் தேதி கேரளாவில் ஹர்த்தால் நடத்த முடிவு
திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு விவகாரத்திற்கு தீர்வு காண வலியுறுத்தி வரும் 18ம் தேதி கேரளாவில் மாநிலம் தழுவிய பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசும், ஆளும் காங்கிரஸ் அரசும் மெத்தனமாக செயல்படுவதாக கூறி முல்லை பெரியாறு போராட்ட குழு இந்த பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கோரி இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு மற்றும் சப்பாத்து பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக முல்லை பெரியாறு போராட்ட குழு சார்பில் தொடர் உண்ணாவிரதம் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தை தீவிரப்படுத்த போராட்ட குழு தீர்மானித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக 18ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் பந்த் நடத்த போராட்ட குழு முடிவு செய்திருப்பதாக இதன் தலைவர் ஜோய் நிரப்பேல் அறிவித்துள்ளார். ஏற்கனவே இக்குழுவின் தலைவராக வேறு ஒருவர் இருந்தார். அவர் அணையை உடைக்கத் தேவையில்லை என்று கருத்து தெரிவித்தார். இதனால் கடுப்பான போராட்டக் குழுவினர் அவரை நீக்கி விட்டு நிரப்பேலை நியமித்தது நினைவிருக்கலாம்.
அடுத்த கட்டமாக ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டன பேரணி நடத்த போவதாகவும் இந்தக் குழுவினர் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications