தேர்தல் பார்வையாளர்களாக உ.பி. செல்லும் 6 தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள்
சென்னை: தேர்தல் பார்வையாளர்களாக தமிழகத்தைச் சேர்ந்த 6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உத்தர பிரதேசம் செல்கின்றனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி 4ம் தேதி முதல் 28ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அம்மாநில முதல்வர் மாயாவதியை தோற்கடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முனைப்பாக உள்ளன.
வெற்றிக் கனியைப் பறிக்க அனைத்து கட்சிகளும் குறியாக உள்ளன. இதற்கிடையே தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் மிகுந்த சிரத்தை எடுத்து செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தேர்தல் பார்வையாளர்களாக தமிழகத்தில் இருந்து ஐ.ஜி.க்கள் எம்.ரவி, சங்கர் ஜிவால், சைலேஷ் குமார் யாதவ், பாலசுப்பிரமணியன், ஆறுமுகம், டி.ஐ.ஜி.வெங்கட்ராமன் உள்ளிட்ட 6 போலீஸ் அதிகாரிகள் உத்தர பிரதேசம் செல்லவிருக்கின்றனர்.
இவர்களில் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றும் வெங்கட்ராமனை அனுப்புவது சுலபமல்ல என்று காவல்துறை இயக்குனர், தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் திருமணம் மார்ச் மாதம் நடக்க இருப்பதால், தேர்தல் பணியில் இருந்து தன்னையும் விடுவிக்க வேண்டும் என்று அரசு போக்குவரத்துக் கழக (தர்மபுரி) விஜிலென்ஸ் அதிகாரியும், ஐ.ஜியுமான பாலசுப்பிரமணியம் தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெங்கட்ராமன், பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 2 பேருக்கு பதிலாக ஐ.ஜி.க்கள் ஏ.கே.விஸ்வநாதன், வன்னிய பெருமாள் ஆகியோரை அனுப்ப காவல்துறை தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications