தானே புயலில் சிக்கி சிதிலமான விவசாயப் பண்ணை- சோகத்தில் மாணவர் தற்கொலை
கடலூர்: தானே புயலில் சிக்கி தனது விவசாயப் பண்ணை பெரும் சேதமடைந்ததால் அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை நினைத்து மன வேதனை அடைந்த கல்லூரி மாணவர் ஒருவர் விஷம் குடித்து உயிரை நீத்த பரிதாபச் சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல் அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் கவுதமன். 19 வயதான இவர் உத்திரமேரூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் கம்ப்யூட்டர் அறிவியல் படிப்பை படித்து வந்தார்.
ரவிச்சந்திரனுக்குச் சொந்தமாக அவரது ஊரில் பண்ணை உள்ளது. அங்குள்ள தென்னை மரங்கள் அனைத்தும் தானே புயலில் சிக்கி வீழ்ந்து விட்டன. இதனால் ரவிச்சந்திரன் குடும்பத்தார் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்த கவுதமன் பண்ணையைப் பார்த்து பெரும் அதிர்ச்சியுற்றார், மன உளைச்சலுக்குள்ளானார்.
அந்த வேதனையுடன் கல்லூரிக்கு வந்த அவர் விஷம் குடித்து விட்டார். மயங்கி விழுந்த அவரை சக மாணவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட கவுதமன் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கவுதமனின் சொந்த ஊரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications