ராகுல்காந்தி விரும்பினால் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்: பிரியங்கா

உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா பிரசாரம் செய்து வருகிறார். அமேதி, ரே பரேலி தொகுதிகளில் பிரியங்கா இன்று பிரசாரம் செய்கிறார். ஆனால், அவர் பொதுக்கூட்டம் எதிலும் பேசவில்லை.
இந்த நிலையில் ராகுல் காந்தி விரும்பினால் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இப்போதைக்கு அமேதி மற்றும் ரே பரேலியில் தேர்தல் பிரசாரம் செய்யவிருக்கிறேன். தீவிர அரசியலில் ஈடுபடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. ராகுல் காந்தி விரும்பினால் எதையும் செய்வேன் என்றார்.
முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் கட்சியின் மத்தியில் பேசிய பிரியங்கா, உங்களது உட் கட்சிப் பூசலையெல்லாம் குழி தோண்டி புதைத்துவிட்டு காங்கிரசின் வெற்றிக்காக தீவிரமாக செயல்பட வேண்டும். கோஷ்டிப் பூசலை கட்சி சகித்துக் கொள்ளாது. கோஷ்டிகளாக செயல்படுவோரை கண்டறிய கிராம அளவில் ரகசிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தவறு செய்வோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சட்டசபைத் தேர்தலை ஒட்டி பல்வேறு மாநிலங்களில் சோனியா குடும்பத்தினர் பிரசாரம் செய்து வருகின்றனர். சோனியா உத்தரகண்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரியங்காவும், ராகுலும் உத்தரப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications