ரயிலில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்: மாணவர் படுகாயம்
சேலம்: சேலத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் ரயிலில் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்தார். இது தொடர்பாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள முளம்துருத்தி பகுதியை சேர்ந்தவர்கள் ஈவாவர்கீஸ், அருண். இவர்கள் 2 பேரும் சேலத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தனர்.
பொங்கல் விடுமுறைக்காக கேரளாவுக்கு செல்லும் ரயில் புறப்பட்டனர். அவர்களுடன் அதே கல்லூரியில் படிக்கும் சில இறுதியாண்டு மாணவர்களும் பயணித்தனர். அப்போது இறுதியாண்டு மாணவர்கள், ஈவா வர்கீஸை கிண்டல் செய்துள்ளனர். மேலும் ஈவா வர்கீஸ் உடன் படிக்கும் மாணவிகளின் செல்போன் எண்களை தருமாறும் கேட்டுள்ளனர்.
இதனால் ஈவா வர்கீசுக்கும், இறுதியாண்டு மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இறுதியாண்டு மாணவர்கள், ஈவா வர்கீஸை தாக்கினர். அதனை தடுக்க முயன்ற அருணும் தாக்குதலுக்கு உள்ளானார்.
ஓடும் ரயில் கல்லூரி மாணவர்கள் இடையே நடந்த மோதல் சம்பவம் மற்ற பயணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் இறுதியாண்டு மாணவர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த ஈவா வர்கீஸ், கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து 5 மாணவர்களின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications