பிரதமர் அலுவகம் மீடியா ஆலோசகராக 'என்டிடிவி' பச்செளரி நியமனம்

Subscribe to Oneindia Tamil

Pankaj Pachauri
டெல்லி: என்டிடிவி இந்தி தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியரான பங்கஜ் பச்செளரி பிரதமர் அலுவலகத்தின் மீடியா ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் சுமார் 20 வருட அனுபவம் கொண்ட இவர், முதலில் பேட்ரியாட் ஆங்கில நாளிதழிலும், பின்னர் சண்டே அப்சர்வர், இந்தியா டுடே, பிபிசி ஆகியவற்றில் பணியாற்றியவர். இப்போது என்டிடிவி தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார்.

இவர் பிரதமர் அலுவலகத்தின் முதன்மைச் செயலாளருக்குக் கீழ் பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இவருக்கு மத்திய அரசின் இணைச் செயலாளர் அல்லது கூடுதல் செயலாளருக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை பிரதமர் அலுவலக மீடியா ஆலோசகராக இருந்த ஹரிஷ் காரே பதவி விலகிவிட்டதையடுத்து பச்செளரி நியமிக்கப்பட்டுள்ளார்.

பச்செளரியின் நியமனத்துக்கு எதிராக என்டிடிவின் போட்டி சேனல்களில் உடனடியாக எதிர்மறை செய்திகள் வெளியாக ஆரம்பித்துவிட்டன. இவரது நியமனத்துக்கு பிரதமர் அலுவலகத்திலேயே எதிர்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.

அதுகுள்ளயா!?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+