அடுத்த 2 இரவுகளுக்கு கடும் குளிரும், பனியும் தமிழகத்தை வாட்டும்-வானிலை மையம்

தமிழகத்தில் வழக்கத்திற்கு விரோதமாக கடும் பனிப் பொழிவும், குளிரும் நிலவுகிறது. இதனால் மக்கள் மாலைக்கு மேல் கூடுகளைத் தேடி ஓடும் பறவைகளைப் போலவே வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். வெளியில் தலை காட்டினால் கடும் பனியில் சிக்கி பலவித வியாதிகளுக்கு உள்ளாக நேரிடுகிறது.
இரவில் கடும் பனியுடன், கடும் குளிரும் அடிப்பதால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயோதிகர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
ஏன் இந்த அதீத பனிப்பொழிவு என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் விளக்குகையில்,
குளிர் அலை தற்போது வீசி வருகிறது. வானமும் தெளிவாக உள்ளது. இதுவே அதிக அளவிலான பனிப்பொழிவுக்கும், கடும் குளிருக்கும் காரணம். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தற்போது நல்ல பனிப்பொழிவும் குளிரும் காணப்படுகிறது.
குறிப்பாக வட தமிழக பகுதிகளில் நல்ல பனிப்பொழிவு காணப்படுகிறது. இங்கு அதிக அளவில் குளிர் அலை வீசுவதே இதற்குக் காரணம்.
தெற்கு தமிழகத்தில் சில இடங்களில் குறைந்த வெப்ப நிலை வெகுவாக குறைந்துள்ளது. வட தமிழகத்தில் இது சற்று அதிகரித்துள்ளது.
21ம் தேதி காலை வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்.
வடக்கு உள்புறத் தமிழகத்தில் அடுத்த 2 ராத்திரிகளுக்கு குளிர் அலை வீசும்.
நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் சில இடங்களில் அடுத்த 2 ராத்திரிகளுக்கு பனிமூட்டம் அதிகமாக இருக்கும்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு குறைந்தபட்ச வெப்ப நிலை 18 டிகிரியாக இருக்கும்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications