புதிய சட்டசபை கட்டிடத்தில் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திட்டம்: அரசு ரெடி, திட்டமும் ரெடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய சட்டசபை கட்டிடத்தின் ' ஏ' பிளாக்கில் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க ரூ.26.9 கோடியில் முதல் கட்ட சீரமைப்பு பணிகள் துவங்கப்படுகின்றது.

புதிய சட்டசபை கட்டிடத்தின் 'ஏ' பிளாக்கில மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும், 'பி' பிளாக்கில் மருத்துவக் கல்லூரியும் துவங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி 97,829 சதுர மீட்டர் பரப்பளவில் 8 மாடிகள் கொண்ட 'ஏ' பிளாக்கில் மருத்துவமனை அமைக்கப்படுகின்றது. இந்த கட்டிடத்தின் தரைத்தளம் உள்பட அனைத்து மாடிகளிலும் தனித் தனி சிறப்புப் பிரிவுகள் துவங்கப்படுகின்றன.

தரைத்தளத்தில் புறநோயாளிகள் பிரிவும், முதல் மாடியில் இதயம், நரம்பியல், நோய் கட்டிகள் தொடர்பான சிறப்பு பிரிவுகளும், 2வது மாடியில் ரத்த சுத்திகரிப்பு மற்றும் ஆய்வகங்களும், 3வது மற்றும் 4வது மாடிகளில் பொது வார்டுகள் அமைக்கப்படுகின்றன. மேலும் 5 மற்றும் 6வது மாடிகளில் சிறப்பு வார்டுகள் உருவாக்கப்படுகின்றது. பொதுமக்கள் பார்வையிட வசதியாக அமைக்கப்பட்ட 2 மாடிகளின் தென்கிழக்குப் பகுதியில் ஆபரேஷன் தியேட்டர்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர இங்கு தீவிர சிகிச்சைப் பிரிவுகள் உருவாக்கப்படவிருக்கின்றன.

மக்கள் வசதிக்காக லிப்ட் மற்றும் சிறப்பு பாதைகள் அமைக்கப்படவிருக்கின்றது. ரூ.26.9 கோடி செலவில் முதல் கட்ட சீரமைப்பு மற்றும் மின் அமைப்பு பணிகள் துவங்கப்படவிருக்கின்றது. இந்த சீரமைப்பு பணிகள் பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும் பல்வேறு பணிகள் டெண்டர் விடப்பட்டு முடிவு செய்யப்படுகிறது. இது குறித்த விவரங்களை வரும் 24 மற்றும் 25 தேதி தேதிகளில் நடக்கும் கூட்டத்தில் டெண்டரில் பங்கேற்பவர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+