கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்புடைய இருவர் சென்னையில் கைது
சென்னை: புதுச்சேரியில் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்ட கும்பலுடன் தொடர்புடைய மேலும் இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில், 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றதாக, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
அவரது சிம் கார்டு குறித்து விசாரித்ததில், சென்னை சிட்லப்பாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த இஸ்ரா உல் ஷேக் என்பவரின் முகவரி அளிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்நிலையில், இஸ்ரா உல் ஷேக் அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து பொருள் வாங்க முயன்றபோது, சந்தேகமடைந்த கடைக்காரர் போலீஸாருக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து இஸ்ரா உல் ஷேக்கை சிட்லப்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். இதுபோல், சைதாப்பேட்டை கடை ஒன்றி்ல் ராகுல் என்கிற முகம்மது கொடுத்த கள்ளநோட்டு குறித்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை சைதாப்பேட்டை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்கள் இருவருக்கும் புதுச்சேரி கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
தொழிலாளர்களாக ஊடுருவல்
கடந்த 10 நாட்களுக்கு முன்னர், கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தொடர்பாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த 3 கட்டுமானத் தொழிலாளர்களை தேசிய புலனாய்வு போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் கைது செய்யப்பட்ட இஸ்மாயிலையும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த கள்ளநோட்டுகள் அனைத்தும் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு பங்களாதேஷ் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளது. இதனையடுத்து சென்னையில் தொழிலாளர்கள் போர்வையில் ஊடுருவியுள்ள வடமாநிலத்தவரை கண்காணிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications