ராகுல் மீது ஷூ வீசப்பட்டதற்கும், எனக்கும் தொடர்பில்லை: ராம்தேவ்

Subscribe to Oneindia Tamil

Baba Ramdev
ஹரித்வார்: டேராடூனில் நடந்த தேர்தல் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது ஷூ வீசப்பட்டதற்கும் தனக்கும் எந்தவித தொடர்புமில்லை என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நேற்று மாலை நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த குல்தீப் சிங்(26) என்பவர் ராகுல் மீது ஷூவை வீசினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ராகுல் மீது ஷூ வீசப்பட்டதற்கு பாபா ராம்தேவ் தான் காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். அதை ராம்தேவ் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

ராகுல் காந்தி மீது ஷூ வீசப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. நான் எனது ஆதரவாளர்களுக்கு கலாச்சாரம், சகிப்புத்தன்மையைத் தான் கற்றுக் கொடுத்துள்ளேன். யார் மீதும் ஷூ வீசும்படி சொல்லவில்லை.

தங்களின் எதிர்ப்பை காட்ட காலணிகளை வீசுவது தவறான பழக்கமாகும். முதலில் அன்னா குழுவினர் மீது ஷூ வீசப்பட்டது. தற்போது மதிப்பிற்குரிய சகோதரர் ராகுல் மீது வீசியுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயலாகும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+