கோழியில் அரசியல் செய்யும் கேரளா-தமிழகத்திலிருந்து போனதை திருப்பி அனுப்பியது!
தேனி: தேனியிலிருந்து அனுப்பப்பட்ட 10 டன் இறைச்சிக் கோழியை திருப்பி அனுப்பியுள்ளது கேரளா. கோழிகள் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி அனுப்பப்பட்டிருந்தாலும், வேண்டும் என்றேதான் இவ்வாறு கோழியை அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறு.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துடன் மோதிக் கொண்டுள்ளது. தமிழர்களைத் தாக்குவது, தமிழர்களின் கடைகளைத் தாக்குவது, தமிழர்களின் வாகனங்களைத் தாக்குவது என அட்டகாசம் செய்து வருகின்றனர். இன்று வரை தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் உள்ளது.
இதற்கு தமிழகத்தில் பதிலடி கொடுக்கப்பட்டது. குறிப்பாக தேனி மாவட்ட மக்கள் மிகுந்த உறுதியுடன் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேல் போராடினர். இதனால் தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு ஒரு பொருளும் போக முடியவில்லை.
இந்த நிலையில், தற்போது தேனி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு பொருள் போக்குவரத்து தொடங்கியுள்ளது. அதன்படி இடுக்கி மாவட்டத்திற்கு 10 டன் இறைச்சிக் கோழிகள் தேனியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை தற்போது கேரளா திருப்பி அனுப்பி விட்டது. கோழிகள் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டிருப்பதாக கேரள அதிகாரிகள் காரணம் கூறியுள்ளனராம். ஆனால் குறுகிய அரசியல் காரணங்களுக்காகவே கோழியை திருப்பி அனுப்பியுள்ளதாக கேரளாவிலேயே கூறுகிறார்கள்.
இதுகுறித்து தேனி மாவட்ட காலநடைத்துறை இணை இயக்குநர் சின்னத்துரை கூறுகையில், கோழிகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருந்தன. ஆனால் அரசியல் காரணங்களுக்காகவே அவற்றை திருப்பி அனுப்பியுள்ளனர். இங்கிருந்து அனுப்பப்பட்ட கோழிகளுக்கு சரியான தீவணம் வைக்காத காரணத்தால்தான் சில கோழிகள் உயிரிழந்துள்ளன என்றார்.
கால்நடைத்துறை உதவி இயக்குநர் சாமுவேல் துரைராஜ் கூறுகையில், இங்கிருந்து அனுப்பப்பட்ட கோழிகளை தமிழக, கேரள எல்லையில் டாக்டர்கள் பரிசோதித்து பின்னரே அனுப்பினர். ஆனால் அங்கு போன பின்னர் கோழிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறி திருப்பி அனுப்பியுள்ளனர். ஆனால் அங்குள்ள அரசியல் கட்சியினர்தான் கோழிகளைத் தடுத்து திருப்பி அனுப்பி விட்டனர் என்றார்.
கோழி வேண்டாம் என்றால் இனிமேல் அனுப்பாமல் நிறுத்த வேண்டியதுதான், வேறென்ன செய்வது...!
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications