சசிகலா அண்ணன் மகன் மகாதேவன் வீட்டில் போலீஸார் திடீர் ரெய்டு

சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகனின் மூத்த மகன்தான் மகாதேவன். ஒரு காலத்தில் போயஸ் தோட்டத்தில் சர்வ அதிகாரத்துடன் தனது அத்தை சசிகலாவின் துணையுடன் வலம் வந்தவர் மகாதேவன். ஜெ. பேரவை மாநிலச் செயலாளராகவும் இருந்துள்ளார். பின்னர் ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டு சமீபத்தில் ஒரேயடியாக விரட்டப்பட்டவர்.
தஞ்சாவூரில் வசித்து வரும் மகாதேவனுக்குச் சொந்தமாக மருத்துவமனை, பஸ்கள் உள்ளன. தற்போது தலைமறைவாகவுள்ள திவாகரனும், இந்த மகாதேவனும்தான் தஞ்சையில் சக்தி வாய்ந்த சசிகலா குடும்ப உறுப்பினர்கள் ஆவர். தற்போது திவாகரன் மீது வழக்குப் பாய்ந்துள்ளது. அவரும் தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாகவே மகாதேவன் வீட்டில் ரெய்டு நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ரெய்டின்போது ஏதாவது சிக்கியதா என்பது தெரியவில்லை. அதிரடிப் பேர்வழியான மகாதேவன் கடந்த காலங்களில் ஆடிய ஆட்டம் அதிமுகவினர் நன்கு அறிந்தது. ஆனால் சமீப காலமாக அவர் சத்தம் போடாமல் இருந்து வந்தார். காரணம், ஜெயலலிதாவின் போக்கு மாறி வருவதை உணர்ந்து. வழக்கமாக டெண்டர் தருவது, நியமனம் உள்ளிட்டவற்றில் வாரி எடுக்கும் வள்ளலாக திகழ்ந்து வந்த மகாதேவன் தற்போதைய ஆட்சி வந்தது முதல் அதில் எதிலும் தலையிடாமல் கப்சிப்பென்று இருந்து வந்தாராம்.
தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் அரசு ஆவணம், ஏதாவது இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கவே இந்த சோதனை நடந்துள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications