2 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை: கோவை மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உள்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி வெளியிட்டுள்ள உத்தரவு:
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை துணை செயலாளர் எஸ்.நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டு, திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சிப்காட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி மாற்றப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
கோவை மாவட்ட கலெக்டராக எம்.கருணாகரன் நியமிக்கப்பட்டு உள்ளார். கோவை மாவட்ட கலெக்டர் டி.என். ஹரிகரன் மாற்றப்பட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
சிப்காட் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி.சபீதா, பள்ளிக் கல்வித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை கூடுதல் தலைமை செயலாளரும், உயர்கல்வித் துறை செயலாளருமான (பொறுப்பு) டி.எஸ்.ஸ்ரீதர் மாற்றப்பட்டு, உயர் கல்வித் துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனர் சந்தோஷ் கே.மிஸ்ரா மாற்றப்பட்டு, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் (டி.என்.பி.எல்.) நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications