பாபுவா நியூ கினியாவில் நிலச்சரிவு: 40 பேர் பலி
மெண்டி: ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள பாபுவா நியூகினியாவில் உள்ள 2 கிராமங்களில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 40 பேர் பலியாகியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ளது பாபுவா நியூகினியா நாடு. அந்நாட்டில் உள்ள மெண்டி நகருக்கு அருகில் இருக்கும் 2 மலைக் கிராமங்களில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. சாலைகளும், தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை நேரத்தில் மக்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் பலர் மண்ணில் புதையுண்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது. இந்த நிலச்சரிவுக்கு குறைந்தது 40 பேர் பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது. குறைந்தது 20 பேரைக் காணவில்லை. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மீட்புப் படையினரும், அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பாபுவா நியூகினியாவில் ஏற்பட்ட மோசமான நிலச்சரிவு இது தான் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் பீட்டர் ஓ நீல் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.
அந்நாட்டு அரசுக்கு ஆஸ்திரேலியா உதவி செய்ய முன்வந்துள்ளது.












Click it and Unblock the Notifications