கல்லூரி நிர்வாகிகளை விட்டு தாக்கியதாக டாக்டர் ராமதாஸ் மீது ஆசிரியர் புகார்- வழக்குப் பதிவு
திண்டிவனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தூண்டுதலின் பேரில் தன்னை திண்டிவனண் வன்னியர் கல்லூரி இயக்குநரும், உதவியாளரும் தாக்கியதாக அந்தக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் மாயகிருஷ்ணன் என்பவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து ராமதாஸ் உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் புகார் பதிவு செய்துள்ளளனர்.
திண்டிவனம் வன்னியர் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் மாயகிருஷ்ணன். இவர் ஒலக்கூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், தன்னை, கல்லூரி இயக்குநர் ஹரிகிருஷ்ணன், உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர் தாக்கினர். டாக்டர் ராமதாஸின் தூண்டுதலின் பேரில்தான் இந்த தாக்குதல் நடந்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து டாக்டர் ராமதாஸ், ஹரிகிருஷ்ணன், வெங்கடேசன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தற்போது காயமடைந்ததாக கூறி மாயகிருஷ்ணன் திண்டிவனம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே திண்டிவனம் கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸின் தம்பி சீனு கவுண்டரை நேற்று சிபிஐ அதிகாரிகள் கைது செய்த நிலையில் தற்போது பேராசிரியர் மாயகிருஷ்ணன் ரூபத்தில் டாக்டர் ராமதாஸுக்கு புது சிக்கல் வந்திருப்பதால் பாமக வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications