20வது முறையாக ரத்த தானம் செய்த அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ்
Subscribe to Oneindia Tamil
கரூர்: குடியரசு தினத்தையொட்டி கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ் ரத்த தானம் செய்தார்.
63வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட தொழிற்பேட்டை, காந்திகிராமம் உள்ளி்ட்ட 63 இடங்களில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தார்.
காமராஜ் ரத்த தானம் செய்வதை அறிந்த அக்கட்சி நிர்வாகிகள் பலர் போட்டி போட்டுக் கொண்டு வந்து ரத்த தானம் செய்தனர். அவர் இதுவரை சுமார் 20 முறை ரத்த தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications