பேராசிரியர் மாயகிருஷ்ணன்தான் பிரச்சினை செய்தார்-டாக்டர் ராமதாஸ் கல்லூரி நிர்வாகம் பதில் புகார்
திண்டிவனம் மாணவர்களிடையே வன்முறையைத் தூண்டினார் பேராசிரியர் மாயகிருஷ்ணன். இதை தட்டிக் கேட்டதால் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் மீது பொய்ப் புகார் கொடுத்துள்ளார் என்று திண்டிவனம் வன்னியர் கல்லூரி பேராசிரியர் மாயகிருஷ்ணன் மீது கல்லூரி நிர்வாகம் போலீஸில் பதில் புகார் கொடுத்துள்ளது. இதையும் போலீஸார் வாங்கி வைத்துள்ளனர்.
திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பம் பகுதியில் டாக்டர் ராமதாஸுக்குச் சொந்தமான வன்னியர் அறக்கட்டளை சார்பில் கல்வி நிலையங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த வன்னியர் கல்லூரி.
இதில் பேராசிரியராக இருப்பவர் மாயகிருஷ்ணன். இவர் ஒலக்கூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில்,என்னை, கல்லூரி இயக்குநர் ஹரிகிருஷ்ணன், உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர் தாக்கினர். டாக்டர் ராமதாஸின் தூண்டுதலின் பேரில்தான் இந்த தாக்குதல் நடந்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து டாக்டர் ராமதாஸ், ஹரிகிருஷ்ணன், வெங்கடேசன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது கல்லூரி நிர்வாகம் சார்பில் அதன் அலுவலர் மாமல்லன் என்பவர் பதில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், கல்லூரி மாணவர்களிடையே வன்முறையைத் தூண்டி விட்டார் பேராசிரியர் மாயகிருஷ்ணன். இதை நான் தட்டிக் கேட்டேன். இதையடுத்து எனக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மாமல்லன்.
இந்த் புகாரையும் போலீஸார் வாங்கி வைத்துள்ளனர். தற்போது புகார் கொடுத்துள்ள மாயகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications