அரசு தடை எதிரொலி: பாட்னா ஐஐடி தலைவர் பதவியிலிருந்து விலகினார் மாதவன் நாயர்
லக்னோ: இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் அரசுப் பணியில் சேர மத்திய அரசு விதித்திருந்த தடையால் பாட்னா ஐஐடி தலைவர் பொறுப்பிலிருந்து அவர் இன்று விலகினார்.
"தடை தொடர்பான அரசின் ஆணை தமக்குக் கிடைக்கவில்லை என்றாலும் தாமாக முன்வந்து பதவி விலகுவதாக" நாயர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, எதனடிப்படையில் தாம் உட்பட 4 பேருக்கு தடை விதிக்கப்பட்டது என்று கேட்டுப் பெற உள்ளதாகவும் மாதவன் நாயர் கூறியுள்ளார்.
ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸும் நாயரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம், இஸ்ரோ தலைவராக மாதவன் நாயர் இருந்தபோது ஏற்படுத்தப்பட்டது. இதில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக புகார்கள் வெடித்தன. இதையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் தலையிட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.
இஸ்ரோவின் வர்த்த்க நிறுவனமான ஆண்ட்ரிக்ஸ், தேவாஸ் என்ற தனியார் அமைப்புக்கு விதிகளை மீறி எஸ் பாண்ட் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்தது என்பது புகார்.
ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டாலும் இது தொடர்பாக விசாரணை நடத்த் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. 5 பேர் கொண்ட குழுவின் தலைவராக முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சின்ஹா இருந்தார்.
இக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்தது.
மாதவன் நாயருடன் இஸ்ரோவின் முன்னாள் அதிகாரிகள் பாஸ்கர் நாராயணன், ஆண்ட்ரிக்ஸின் ஸ்ரீதர் மூர்த்தி, இஸ்ரோ சாட்டிலைட் முன்னாள் இயக்குநர் சங்கரா ஆகியோருக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications