மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை மாநகரின் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு நில ஆர்ஜிதம் செய்யும் பணி தொடங்கப்பட்டதில் இருந்தே பல கட்டங்களில் எதிர்ப்பு உருவாகிவருகிறது. இந்த நிலையில் வண்ணாரப்பேட்டை, மண்ணடி போன்ற பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை செல்வதால் பாதிப்பு ஏற்படும் என்று கூறி ஜார்ஜ் டவுன் கட்டட உரிமையாளர்கள் நல சங்கம் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுவதால் 5 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும் எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர். இதற்கு எதிர் மனு தாக்கல் செய்திருந்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், வண்ணாரப்பேட்டை, மண்ணடி பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக பொதுமக்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. மேலும் ஆழ்துளைகுழாய் கிணறு, கிணறுகளை மூடவும் அதற்கு நிவாரணமாக குடும்பங்களுக்கு வேறு கிணறுகளை அமைக்க ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வினோத் கே. சர்மா, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் இது மக்களுக்கு பயனளிக்கும் திட்டம் என்பதால் அதற்கு தடை கோரும் மனுவை தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்தார்.
-
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications