'இந்து' ராம் மீதான நில அபகரிப்பு புகார்: நாளை விசாரணை தொடக்கம்

ராம் மீது, போலீஸ் டி.ஜி.பி.யிடமும், சென்னை போலீஸ் கமிஷனரிடமும் 6 புகார் மனுக்களை பழனிச்சாமி கொடுத்திருந்தார்.
கோவையில் செயல்படும் சேரன் குரூப் கம்பெனிகளின் இயக்குநராகவும் உள்ள பழனிச்சாமி திருச்செங்கோடு தொகுதி எம்.பி.யாகவும், காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றியவர்.
புகார் என்ன?
சென்னை கிழக்கு கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரம் அருகே சுமார் 400 ஏக்கர் நிலத்தை 2004-ம் ஆண்டு பழனிச்சாமிக்கு சொந்தமான சேரன் குரூப்ஸ் வாங்கியது.
பழனிச்சாமி வாங்கிய நிலம் இந்து ஆங்கில நாளிதழின் துணை நிறுவனங்களான ஸ்போர்ட்டிங் பாஸ்ட் (ஐ)லிமிடெட் நிறுவனத்துக்கும் மற்றும் இந்து கார்ஸ் நிறுவனத்துக்கும் சொந்தமானதாகும். அப்போதைய மதிப்பீட்டின்படி ரூ.30 கோடிக்கு இந்த நிலத்தை பழனிச்சாமி வாங்கினார்.
நில மதிப்பு பல நூறு கோடியாக உயர்ந்ததையடுத்து இந்து குழும நிறுவனங்கள் அதே நிலத்தை ரூ30 கோடிக்கு திருப்பிக் கேட்டது என்பது பழனிச்சாமியின் புகார்.
நிலத்தை திருப்பிக் கொடுக்க மறுத்த தம்மை காவல்துறை உதவியோடு இந்து ராம் மற்றும் ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர் மிரட்டினர் என்றும் ஆவணங்களை கொள்ளையடித்தனர் என்றும் பழனிச்சாமி புகார் கூறியுள்ளார்.
போலி ஆவணங்கள் மூலம் தமது நிலம் அபகரிக்கப்பட்டுவிட்டதாகவும் பழனிச்சாமி குற்றம்சாட்டியிருந்தார். மேலும் பொய்வழக்கில் தம்மை சிறைக்கு அனுப்பினர் என்பதும் பழனிச்சாமியின் புகார்.
இதனை ராம் மறுத்திருந்த நிலையில் நாளை பழனிச்சாமியிடம் விசாரணை நடைபெறவுள்ளது.
விசாரணையின் போது நிலம் தொடர்பான முக்கிய ஆவணங்களை போலீஸில் ஒப்படைக்க இருப்பதாக பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications