கொடைக்கானலில் போதையில் ஆற்றில் குளித்த பெங்களூர் என்ஜினியர் பலி!
கொடைக்கானல்: கொடைக்கானல் ஆற்றில் குடிபோதையில் தனது காதலியுடன் குளித்த பெங்களூர் என்ஜினியர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினார்.
பெங்களூர் ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் பூவையா. அவரது மனைவி கங்கா. அவர்களது மகன் செங்கப்பா (30). சாப்ட்வேர் என்ஜினியர். அவர் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வினிதா (28) என்ற பெண்ணை காதலித்து வந்தார். வினிதா ஒரு பல் மருத்துவர்.
நேற்று முன்தின் செங்கப்பாவின் பிறந்தநாள் ஆகும். பிறந்தநாளை காதலியுடன் கொண்டாட விரும்பிய அவர் வினிதாவை அழைத்துக் கொண்டு கொடைக்கானலுக்குச் சென்றார். அங்கு பேத்துபாறை பகுதியில் உள்ள ஒரு ரிசார்டில் தங்கினார்கள். அங்கு செங்கப்பா தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
பின்னர் அவர்கள் இருவரும் ரிசார்டுக்கு அருகில் ஓடும் ஆற்றில் குளித்தனர். அப்போது செங்கப்பாவை ஆற்றுநீர் இழுத்துச் சென்றது. அவரைக் காப்பாற்ற முயன்ற வினிதாவின் அலறல் சத்தம்கேட்டு ரிசார்ட் ஊழியர்கள் ஓடி வந்து செங்கப்பாவின் உடலை மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வினிதாவை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது,
செங்கப்பாவின் பிறந்தநாளைக் கொண்டாடவே நாங்கள் இங்கு வந்தோம். இங்குள்ள ரிசார்டில் காலையில் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு நாங்கள் மது அருந்தினோம். பிறகு மாலையிலும் மது அருந்திவிட்டு ஆற்றில் குளிக்கச் சென்றோம்.
ஆற்றில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது பாறை வழுக்கி செங்கப்பா ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டார். நான் அவரைக் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. என்னால் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை என்றார்.
இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications