பஞ்சாயத்து தலைவி வீட்டுக்கு தீ வைபபு- 8 பஞ்சாயத்து தலைவர்கள் பாதுகாப்பு கேட்டு கலெக்டரிடம் மனு
நெல்லை: பாதுகாப்பு கேட்டு தென்கலம் பஞ்சாயத்து தலைவி செல்வி உள்பட 8 பஞ்சாயத்து தலைவர்கள் நெல்லை கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தாழையூத்து அருகேயுள்ள தென்கலம் பஞ்சாயத்தில் தலைவியாக இருப்பவர் செல்வி. இவருக்கும் அதே பகுதியச் சேர்ந்த சிலருக்கும் தேர்தல் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நல்லம்மாள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் குடிநீர் குழாயில் நடந்த பணிகளை செல்வி மற்றும் அரசு அதிகாரிகள் பார்வையிட சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தகராறு செய்தனர். தொடர்ந்து செல்வியின் வீட்டை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. இது குறித்து மானூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து பஞ்சாயத்து தலைவி செல்வி உள்பட 8 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் நெல்லை கலெக்டர் செல்வராஜை சந்தித்து மனு கொடுத்தனர். மானூர் யூனியன் பகுதிக்கு உட்பட்ட பஞ்சாயத்துக்களில் உள்ள தலைவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பணிகளை பார்வையிட சென்ற தென்கலம் பஞ்சாயத்து தலைவி செல்வியிடம் தகராறு செய்ததுடன் அவரது வீடும் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. எனவே பஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications