சனீஸ்வரன் கோவிலுக்கு வந்த இலங்கை தமிழ் அமைச்சருக்கு சிறுத்தைகள் கருப்புக் கொடி
திருநள்ளாறு: சனீஸ்வரன் கோவிலுக்கு வந்த இலங்கை அமைச்சருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி ஆவேசமாக கோஷமிட்டதால் அவர் பயந்து போனார். இதையடுத்து போலீஸார் மிகவும் கஷ்டப்பட்டு அமைச்சரை அங்கிருந்து பத்திரமாக அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் சனிக்கிழமை பக்தர்கள் வந்து ஸ்ரீ சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். நேற்று இரவு சுமார் 9 மணியளவில் இலங்கை அமைச்சர் தொண்டமான் தரிசனம் செய்யவந்தார். கோயிலுக்குள் சென்று தரிசனம் முடித்துவிட்டு திரும்பும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 20 பேர் அமைச்சர் வருகையை கண்டித்து, ராஜபக்சேவுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு கறுப்புக் கொடி காட்டினர்.
போலீசார் அவர்களை தடுக்க முயற்சி மேற்கொண்டும் பயனில்லை. இலங்கை அதிபருக்கு எதிராக ஆவேசமாக அவர்கள் கோஷம் எழுப்பினர். தமிழர்களுக்கு எதிராக நடந்துகொள்ளும் போக்கை கைவிடும்படி ஆவேசமாக பேசினர்.
அதே வேளையில் அமைச்சரை பாதுகாப்புடன் காரில் ஏற்றி அனுப்பிவைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அமைச்சர் வருகை குறித்து கோயில் நிர்வாகத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அமைச்சருக்கு கறுப்புக் கொடி காட்டிய பிரச்சனையால் திருநள்ளாறு கோயில் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில்தான் ராஜபக்சேவின் மச்சானுக்கு ராமேஸ்வரத்தில் வைத்து தமிழர் அமைப்புகள் செருப்படி கொடுத்து கடும் தாக்குதலைத் தொடுத்தன. இந்த நிலையில் தற்போது தொண்டமானுக்கு எதிராக போராட்டம் நடந்துள்ளதால் இலங்கைத் தலைவர்கள் தரப்பில் சற்றே பீதி ஏற்பட்டுள்ளாக கருதப்படுகிறது.
-
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications