மகளை அடித்த மருமகன் உடல் முழுவதும் பிளேடால் கிழித்த மாமனார்!
பெரம்பூர்: தனது மகளை அடித்து துன்புறுத்திய மருமகனை மாமனார் பிளேடால் கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் சுந்தர் (30). அவரது மனைவி வள்ளி. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சுந்தருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்படி தகராறு ஏற்படும் போதெல்லாம் சுந்தர் தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்துவார். கடந்த வாரமும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்ட வள்ளி கொடுங்கையூர் கட்டபொம்மான் நகரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.
கடந்த 28ம் தேதி சுந்தர் தனது மனைவியை அழைத்து வர மாமனார் வீட்டுக்கு சென்றார். திரும்பவும் வீட்டுக்கு வருமாறு அழைத்தும் வள்ளி வர மறுத்துவிட்டார். இதையடுத்து அவர் தனது மாமனார் குருசாமியை அணுகி வள்ளியை அனுப்பி வைக்குமாறு தெரிவித்தார். அப்போது மாமனார், மருமகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி மகளை தாக்கிய மருமகனை குருசாமி பிளேடால் முகம், உடலில் பல்வேறு இடங்களில் கிழித்தார்.
இதில் படுகாயம் அடைந்த சுந்தர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கிடையே குருசாமி தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் குறித்து கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப் பதிவு செய்து குருசாமியைத் தேடி வருகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications