புத்துணர்வுப் பயிற்சி முடிந்தது-ஊர் திரும்ப மறுத்த யானைகளை கும்கியை வைத்து லாரியில் ஏற்றினர்

Subscribe to Oneindia Tamil

கூடலூர்: நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் நடந்து வந்த புத்துணர்வுப் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட யானைகள் பல சொந்த ஊர்களுக்குச் சொல்ல மறுத்து லாரிகளில் ஏற அடம் பிடித்ததால் அவற்றை கும்கி யானையை வைத்து லாரிகளில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.

வாரம் முழுவதும் வேலை பார்த்து விட்டு, 2 நாள் ரெஸ்ட் எடுத்த பிறகு, மறுபடியும் திங்கள்கிழமை வேலைக்குப் போகும்போது நமக்கெல்லாம் எவ்வளவு கடுப்பாக இருக்குமோ அதே உணர்வுதான் தெப்பக்காட்டுக்கு கடந்த டிசம்பர் 14ம் தேதியன்று புத்துணர்வு முகாமில் பங்கேற்க வந்த கோவில் யானைகளுக்கும் இருந்திருக்கும் போல. நேற்றுடன் முகாம் முடிவடைந்த போது பல யானைகள் சொந்த ஊர்களுக்குப் போக மறுத்து அடம் பிடித்தன.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காட்டில் கடந்த டிசம்பர் 14ம் தேதி கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியது. 37 யானைகள் கலந்துகொண்டன. புத்துணர்வு முகாம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

இதையடுத்து நேற்று அதிகாலை 2 மணியிலிருந்து அந்தந்த கோயில்களுக்கு அனுப்ப, யானைகளை லாரிகளில் ஏற்றும் பணி தொடங்கியது. சில யானைகள் எந்தவித எதிர்ப்பும் இன்றி லாரிகளில் தாமாக ஏறிக்கொண்டன. சில யானைகள் பிளிறியபடி அடம்பிடித்தன. இருப்பினும் பாகன்களின் முயற்சியில் அவை லாரிகளில் ஏற்றப்பட்டன.

அடம் பிடித்த வள்ளி

ஆனால் நெல்லை அழகிய நம்பி நாராயணன் கோயில் யானையான குறுங்குடி வள்ளி லாரியில் ஏற மறுத்து காலை 9 மணி வரை 5 மணி நேரம் போக்குகாட்டியது. ஒரு கட்டத்தில் யானை பயந்து காட்டுக்குள் ஓடிவிட்டது.

என்னடா இது வம்பாப் போச்சே என்று குழம்பிய பாகன்கள் ஓடி சென்று யானையை பிடித்து வந்தனர். பின்னர் கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டு, அவற்றின் உதவியுடன் யானையை லாரியில் ஏற்றினர்.

வள்ளி என்றாலே கள்ளியாச்சே.. அப்படி லாரியில் ஏற்றிய பிறகும் வள்ளி, லாரியில் இருந்து குதித்து காட்டுக்குள் ஓடிவிட்டது. பின்னர் கடுமையாக போராடி அதை லாரியில் ஏற்றினர்.

அதேபோல இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் நடந்தது. முகாமுக்கு வந்த இடத்தில் தென்காசி திருவிளங்குமரன் கோயில் யானை வள்ளியும், திருச்செந்தூர் ரெட்டை திருப்பதி கோயில் யானை லட்சுமியும் தோழிகளாகி விட்டன. இரண்டுமே ஆரம்பத்திலிரு்நதே பாசத்தோடு பழகி வந்தன. முகாம் முடிந்து கிளம்பியபோது இரண்டுக்கும் கண்ணீர் ததும்பிக் கொட்டியது. பிரிய மனமில்லாமல், இரண்டும் தத்தமது லாரியில் ஏறிய காட்சியைப் பார்த்த அத்தனை பேரும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போய் விட்டனர்.

பாட்டு போட்டதும் பாய்ந்து ஏறிய திருப்பரங்குன்றம் அவ்வை

இதேபோல இன்னொரு விசேஷமும் இருந்தது. மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அவ்வை என்ற யானை லாரியில் ஏற மறுத்து டகாய்ச்சி காட்டிக் கொண்டிருந்தது. அப்போது லாரி டிரைவருக்கு ஒரு சமயோசித யோசனை தோன்றியது.

தனது லாரியில் இருந்த டேப்பில் அவர் முருகன் பாட்டு ஒன்றைப் போட்டார். அந்தப் பாட்டைக் கேட்டதும், சத்தம் போடாமல் லாரியில் ஏறி நின்றது அவ்வை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+