2 முறை தன்னைக் கொல்லப் பார்த்தாராம் சோனியா காந்தி-சொல்கிறார் சாமி!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அரசுக்கு அடுத்தடுத்து நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டிருக்கும் சாமி இப்போது சோனியா காந்தியைக் குறி வைத்திருப்பதாக தெரிகிறது. அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தி அதைத்தான் காட்டுகிறது.
சாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், 2006ம் ஆண்டு தன்னை இரண்டு முறை கொலை செய்ய சோனியா காந்தி முயன்றதாக கூறியுள்ளார். ரேபரேலியிலும், லக்னோவிலும் இந்த கொலை முயற்சிகள் நடந்தனவாம். மேலும் இதுதொடர்பான ஆதாரம் அவரிடம் இருக்கிறதாம். அதாவது கொலை முயற்சி தொடர்பாக பதிவான முதல் தகவல் அறிக்கைகள் அவரிடம் உள்ளதாம்.
இதுகுறித்து சாமி கூறுகையில், எனது பாதுகாப்பு குறித்த கவலையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 23-4,06 அன்று சோனியா காந்தி இரண்டு முறை என்னைக் கொலை செய்ய சதி செய்தார். ரேபரேலியிலும், லக்னோவிலும் இந்த முயற்சிகள் நடந்தன. இதுதொடர்பான முதல் தகவல் அறிக்கைகள் உள்ளன என்று கூறியுள்ளார்.
அதேபோல ராசாவை விசாரிக்க அனுமதி கோர சாமிக்கு உரிமை உள்ளு என்று ஜனவரி 31ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நாளில் இன்னொரு ட்விட்டர் செய்தியை வெளியிட்டார் சாமி. அதில், கடவுள் மீது நம்பிக்கை கொண்ட, தேச பக்தி கொண்ட ட்விட்டர் கணக்காளர்கள் பலரும் என்னைப் பாராட்டியுள்ளனர். இனிமேல் நான் நேரடியாக சோனியாவுடன் மோதப் போகிறேன் என்று கூறியுள்ளார்.
2ஜி ஊழல் பணத்தில் 60% பணம் சோனியாவுக்கு: சாமி
இதற்கிடையே 2ஜி வழக்கில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சாமி கூறுகையில்,
2ஜி ஊழலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அடுத்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாதான் என்னுடைய அடுத்த இலக்கு. இந்த ஊழலில் குற்றம்புரிந்தவர்களை வெளிப்படுத்துவது சவாலான ஒன்று.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அடுத்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாதான் என்னுடைய இலக்கு. இந்த ஊழலில் 60 சதவீத பணத்தை அவர்தான் எடுத்துக் கொண்டார் என்றார்.












Click it and Unblock the Notifications