விஜயகாந்த் ஆணையிட்டால் சங்கரன்கோவிலில் போட்டி: நெல்லை மாவட்ட நிர்வாகிகள் அதிரடி
நெல்லை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆணையிட்டால் சங்கரன்கோவில் மட்டுமல்ல தமிழகத்தில் எங்கு தேர்தல் நடந்தாலும் சந்திப்போம். சவாலையும், களத்தையும் எதிர்கொள்ளும் தைரியமும், திராணியும் தேமுதிகவினருக்கு உண்டு என்பதை நிரூபிப்போம் என்று நெல்லை மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து நெல்லை மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் கூறியதாவது,
விஜயகாந்த் ஆணையிட்டால் எந்த களத்தையும் சந்திக்க நாங்கள் தயார். அவரது அசைவுகள் எல்லாம் எங்களுக்கு தெரியும். அவர் எப்போது என்ன முடிவெடுக்க வேண்டுமோ அதை சரியாகச் செய்வார். தெய்வத்தை தவிர வேறு யாருக்கும் பயப்பட மாட்டார்.
கடந்த ஆட்சியின் போது இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் இடைத்தேர்தலில் போட்டியிட தைரியம் இல்லாமல் பின்வாங்கியவர்கள் எல்லாம் எங்களுக்கு சவால் விடுகின்றனர்.
தேர்தலை சந்திப்பதற்கு தேமுதிக தயங்கியதே இல்லை என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தலைவர் சொன்னது போல் ஆளுநர் ஆட்சியை அமுல்படுத்திவிட்டு நடத்தினால் தேமுதிக முதல் ஆளாக களத்தில் குதிக்கும்.
நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி சங்கரன்கோவிலில் போட்டியிடும் முடிவை தலைவர் அறிவித்தால் அதற்கான களப்பணியாற்ற தேமுதிக தொண்டர்கள் தயாராக உள்ளனர். தேர்தலை சந்திக்கும் தைரியமும், திராணியும் தேமுதிகவினருக்கு உண்டு என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications