பிரசவத்தின் போது தாயும், சேயும் பலி-மருத்துவமனைக்கு கூடுதல் பாதுகாப்பு
தூத்துக்குடி: பிரசவத்தின் போது தாயும், சேயும் இறந்ததன் எதிரொலியாக தூத்துக்குடியில் இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அருகே பராக்கிராமபுரம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்வரின் நிறைமாத கர்ப்பிணி ராஜலெட்சுமி. இழர் தூத்துக்குடி பெருமாள்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் உள்ள குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் தாயின் உயிரை காப்பாற்ற வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து உறவினர்கள் ராஜலெட்சுமியை ஜெயராஜ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சையி்ன் போது ராஜலெட்சுமி இறந்து விட்டார். தாமதமான சிகிச்சை காரணமாகவே தாயும், சேயும் இறந்து விட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதையடுத்து 2 மருத்துவமனைகளுக்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இதேபோல் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்ததால் மருத்துவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதால் போலீசார் மருத்துவமனைகளுக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications