மக்கள் விரோதப் போக்கை அதிமுக அரசு கைவிடாவிட்டால் அறப் போராட்டம் நடத்துவோம்-திமுக பொதுக்குழு

திமுக பொதுக்குழு இன்று காலை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கருணாநிதி தலைமையில் கூடியது. இதில் நேற்று நடைபெற்ற உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
மொத்தம் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானது கச்சத்தீவு குறித்தது. அத்தீர்மான விவரம்:
இலங்கையுடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி கச்சத்தீவை அவர்கட்கு விட்டுத்தருவதென்று 1974ஆம் ஆண்டு மத்திய அரசு ஒரு முடிவினை எடுத்தபோது 21.8.1974 அன்று தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி, ‘‘இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உறவுகள் கொண்டதுமான கச்சத்தீவு பிரச்னையில், மத்திய அரசு எடுக்கும் முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு - மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில், இலங்கை அரசோடு செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.’’ என்னும் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியும்; 1974 ஜூன் மாதம் 29 ஆம் தேதியன்று சென்னையில் அனைத்துக்கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசியபோது, தெரிவிக்கப்பட்ட கருத்தின் அடிப்படையில் இந்தியப் பிரதமருக்கு கருணாநிதி ‘‘கச்சத்தீவின் மீது இலங்கை கொண்டாடிவரும் உரிமையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு, இருநாடுகளுக்கும் இடையே சமீபத்தில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம், மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக அமைந்துள்
து என்று தமிழக அரசின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் தெரிவித்துக்கொள்வதோடு, நாங்கள் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள இந்தத் தீர்மானத்தைக் கருத்திலே எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.’’ என்று கடிதம் அனுப்பியும்;
திமுக ஆட்சியில் இருந்தபோதே 1974ஆம் ஆண்டு கழகத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியும் இருக்கிறோம். மேலும், 14-7-1974 அன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில், கச்சத்தீவு ஒப்பந்தக் கண்டன நாள் நடத்தியும்; மத்திய அரசின் வெளியுறவுச் செயலாளர் கேவல் சிங், 1974-ல் கருணாநிதியை சென்னையில் சந்தித்த போதும், வெளியுறவு அமைச்சர் ஸ்வரண் சிங்கிடமும் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவதற்கு முதல்வர் கருணாநிதி தீவிரமான எதிர்ப்பைத் தெரிவித்தார்.
கட்சி வேறுபாடுகளுக்கும், அரசியல் வேறுபாடுகளுக்கும் சிறிதளவும் இடம்தராமல் கருணாநிதி நடவடிக்கை எடுத்தும்கூட, தமிழர்களுக்குச் சொந்தமான தமிழ் நிலத்தின் ஒரு பகுதி விட்டுக் கொடுக்கப்பட்ட காரணத்தால்; கச்சத்தீவின் உரிமையை மீட்டெடுக்க வேண்டுமென்று, 1974ஆம் ஆண்டு முதலே திமுக, இந்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
2011 தமிழகச் சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தலின்போது, திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும், 1974ஆம் ஆண்டு இருந்த நம் நாட்டின் உரிமைகள் 1976ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆட்சியில் “திரும்பப் பெறப்பட்டதன் காரணமாக, அடிக்கடி கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், சிறைப் பிடிக்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாக அதிகரித்து வருவதால், கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்” என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
1974ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு அதுவரை வழங்கப்பட்டிருந்த மீன் பிடித்தல், மீன் வலை உலர்த்துதல் மற்றும் தேவாலயத்தில் வழிபாட்டுரிமை ஆகிய அம்சங்கள், 1976ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆட்சியில் மீண்டும் பறிக்கப்பட்டுவிட்ட சூழ்நிலையில்; கச்சத்தீவிற்கு தமிழக மீனவர்கள் தடையேதுமின்றிச் செல்வதற்கும், அதனை ஒட்டிய இடங்களில் இழந்த உரிமையைக் கைக் கொள்வதற்கும் மீட்டெடுப்பதற்கும், கச்சத்தீவினை இந்தியாவிற்கே திரும்பப் பெறுவதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை மேலும் காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
மற்ற தீர்மானங்கள்:
முல்லை பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு காண்பதுடன் இந்திய நாட்டின் கூட்டாட்சி தத்துவ ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்.
செம்மொழி தமிழாய்வு மையம், நூலகத்தை தமிழக அரசிடம் இருந்து காப்பாற்ற அந்த மையத்துக்கு புதிய நிர்வாக குழுவை மத்திய அரசு நியமிக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான நிலைக்குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
மின்வெட்டால் மக்கள் அவதிப்படும் சூழ்நிலையில் மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை அதிமுக அரசு மேற்கொண்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும். எனவே, கட்டண உயர்வுக்கான திட்டத்தை கைவிட வேண்டும்.
அறப் போராட்டங்கள் நடத்துவோம்
ஐகோர்ட் தீர்ப்பு அடிப்படையில் மக்கள் நலப்பணியாளர்களை உடனே பணியில் அமர்த்த வேண்டும்.
எதிர்க்கட்சியில் உள்ளவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் இருந்தும் பொய் வழக்குகள் போடுவதில் இருந்தும் காவல்துறையினரை விடுவித்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் முழுமையாக ஈடுபட செய்ய அரசு முன்வர வேண்டும். இல்லாவிட்டால் திமுக அறப்போராட்டங்களை நடத்தும்.
தேர்தல் நேரத்தில் ஒருதலைபட்சமாக செயல்பட கூடியவர் என்று ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டால் அறிவிக்கப்பட்டவர் தமிழக தேர்வாணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.
கரும்புக்கு ரூ.3 ஆயிரம் விலை வழங்க வேண்டும்.
'தானே' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வேண்டிய நிவாரண பணிகளை தமிழக அரசு உடனே செய்ய வேண்டும்.
தமிழை மத்திய ஆட்சி மொழியாக்க வேண்டும்.
பால் விலை, பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும்
திமுக தலைவர் கருணாநிதியின் எச்சரிக்கையை எண்ணிப் பார்த்து, தமிழக மீனவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் திமுக அறப்போராட்டம் நடத்தும்.
வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னையில் நாட்டு நலனை முன்னிறுத்தி மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு விரைவில் தீர்வு காண வேண்டும்.
-
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட் -
வேட்பாளரை மாற்றுங்க.. அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட.. தாம்பரம் எம்எல்ஏ SR ராஜா ஆதரவாளர்கள் -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு! ஸ்டாலின் சொன்ன மேஜர் அறிவிப்பு! திமுக சிக்ஸர் வாக்குறுதி -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
OPS: விருப்ப மனு கொடுத்தும் சீட் கிடைக்கலையே.. திடீரென அண்ணா அறிவாலயம் வந்த ஓபிஎஸ் மகன்! -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி! -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை?












Click it and Unblock the Notifications