ப.சி.க்கு சாதகமான தீர்ப்பால மத்திய அரசு மீதான ஊழல் கறை மறையாது: பா.ஜ.க.
டெல்லி: மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சாதகமாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதாலேயே மத்திய அரசு மீதான ஊழல் கறை மறைந்துவிடாது என்று பாரதிய ஜந்தா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
பாட்டியால சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பினால் மத்திய அரசின் ஊழலுக்கு எதிரான எமது பிரச்சாரம் ஓய்ந்துவிடாது. அதேபோல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீதான ஊழல் கறையும் ம்றைந்துவிடாது.
ஐ.மு. அரசின் ஊழல்களை நாட்டு மக்களிடம் பா.ஜ.க. கொண்டு சேர்க்கும்.
தற்போது கீழ்நீதிமன்றம்தான் சிதம்பரத்துக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது. இன்னமும் 2 மேல் நீதிமன்றங்கள் இருக்கின்றன. ப.சிதம்பரத்துக்கு எதிரான ஆதாரங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்போம்.
ஆ. ராசா பதவி வகித்த காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதே 2ஜி ஊழலுக்கு சாட்சியாக இருக்கிறது என்றார் அவர்.
மற்றொரு மூத்த பாஜக தலைவரான ஜஸ்வந்த் சிங், பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் இந்தத் தீர்ப்போடு வழக்கு முடிந்துவிடப்போவதில்லை," என்றார்.
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!












Click it and Unblock the Notifications