யோகா, ஆயுர்வேதம் மூலம் யுவராஜின் புற்றுநோயைக் குணப்படுத்தத் தயார்-ராம்தேவ்
Subscribe to Oneindia Tamil
அலகாபாத்: தனது யோகாசனம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை மூலம் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கு வந்துள்ள புற்றுநோயை தன்னால் குணப்படுத்த முடியும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது யோகாசன அறிவு மற்றும் ஆயுர்வதே ஞானத்தை யுவராஜ் சிங்குக்குப் பயன்படுத்தத் தயாராக உள்ளேன். புற்றுநோய் உள்ளிட்ட பல அபாயகரமான நோய்களுக்கு ஆயுர்வேதம் மூலம் பல வெற்றிகளை நாங்கள் கண்டுள்ளோம். எனவே யுவராஜ் சிங்குக்கும் அதை செய்ய தயாராக இருக்கிறோம் என்றார் ராம்தேவ்.
யுவராஜ் சிங்குக்கு நுரையீரல் புற்று நோய் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வந்திருப்பது கிரேட் 1 புற்று நோய் என்றும் அது குணப்படுத்தக் கூடியதுதான் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications