சட்டசபையில் ஆபாச படம் பார்த்த கர்நாடகா அமைச்சர்களை சிறையில் அடைக்க வேண்டும்: அன்னா ஹஸாரே

கர்நாடக சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருக்கையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த பாஜக அமைச்சர்கள் லக்ஷ்மண் சாவாதி, சிசி பாட்டில் மற்றும் கிருஷ்ண பாலிமார் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த 3 பேரையும் சட்டசபையில் இருந்து நீக்கி சிறையில் அடைக்க வேண்டும் என்று அன்னா ஹஸாரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
அரசியல் கட்சிகளில் இதுபோன்ற ஆட்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் புனிதமான கோவில்கள், நாடாளுமன்றம், சட்டசபை ஆகியவற்றை அசிங்கப்படுத்துகின்றனர். ஆனால் அப்படிபட்டவர்களுக்கு சீட் கொடுக்கத் தான் அரசியல் கட்சிகள் போட்டா போட்டு போடுகின்றன. அவர்களால் நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக ஆகிவிடும்.
அந்த 3 பேரும் சட்டசபை மற்றும் அரசியலமைப்பை இழிவுபடுத்தியுள்ளனர். எனவே, அவர்களை சட்டசபையில் இருந்து நீக்கி சிறையில் அடைக்க வேண்டும் என்றார்.
இந்த சம்பத்தையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சட்டசபையில் செல்போன்களுக்கு தடை விதிக்கப்படவிருக்கிறது என்பது குறி்ப்பிடத்தக்கது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications