ஸ்டார் ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட்டிடம் சில்மிஷம்.. ஆடையை கிழிக்க முயன்ற 2 தவெக பிரமுகர்கள்! தூக்கிய போலீஸ்
சென்னை: தவெக நிர்வாகிகள் மீதான பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், சென்னையில் மீண்டும் ஒரு புகார் முளைத்துள்ளது.. ஏற்கனவே கோவை, திருவண்ணாமலை மாவட்டங்களில் பெண் நிர்வாகிகள் புகார் அளித்து போராட்டங்களில் இறங்கியுள்ள நிலையில், இப்போது சென்னை நட்சத்திர ஹோட்டலில் பணிபுரியும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெகவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது?
சென்னை கோயம்பேட்டில் அந்த பிரபல நட்சத்திர ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.. இங்கு 30 வயதுடைய பெண் ரிசப்ஷனிஸ்ட்டாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 9-ம் தேதி அவர் டியூட்டியில் இருந்தபோது, அங்கு பைக்கில் வந்த 2 பேர் அவரிடம் ஆபாசமாக பேசியிருக்கிறார்கள்.. அத்துடன் தங்களுடன் தவறான உறவுக்கு வருமாறும் அழைத்தார்களாம்.

சென்னை ஸ்டார் ஹோட்டல்
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அவர்களிடம் மறுப்பு தெரிவித்துள்ளார். உடனே அந்த 2 நபர்களும் சேர்ந்து, ஆவேசத்தில் அந்த பெண்ணின் ஆடைகளை கிழிக்க முயன்றுள்ளார்கள்.. அத்துடன் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது.. இதனால் செய்வதறியாது திகைத்த அந்த பெண், உடனடியாக ஹோட்டல் செக்யூரிட்டிகளிடம் நடந்ததை சொல்லி உள்ளார்.. ஆனால் அதற்குள் அந்த 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
எனினும், இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் அரும்பாக்கம் மகளிர் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் ஹோட்டலிலிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். பைக்கின் பதிவு நம்பரையும் வைத்து விசாரணையை மேற்கொண்டனர்..
கோயம்பேடு ரிசப்ஷனிஸ்ட்
அப்போதுதான், அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரபுகுமார் (49), பாலாஜி (30) ஆகிய இருவருக்கும், இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையுமே போலீஸார் கைது செய்தனர். இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்படி 2 பேரும் புழல் ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர். இவர்கள் 2 பேருமே திருமணமானவர்கள்.
இதில் கைது செய்யப்பட்ட பிரபுகுமார், தவெகவின் சென்னை மத்திய மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினராவார். பாலாஜியும் அதே மாவட்ட இளைஞரணியில் பொறுப்பு வகிப்பவராம்.. இதில் பிரபுகுமாரின் கட்சிப் பொறுப்பு கடந்த 5-ம் தேதியே பறிக்கப்பட்டுவிட்டதாக மாவட்ட தலைமை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.. அதாவது, இந்த சம்பவம் நடந்தது 9-ம் தேதி.. ஆனால் 5ம் தேதியே பிரபுகுமார், கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சில தவெக நிர்வாகிகளால் சலசலப்பு
ஏற்கனவே தவெகவில் பெண் நிர்வாகிகள் சிலர், தங்கள் சொந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மீதே பாலியல் புகார்களை முன்வைத்து வருவது அண்மையில் பேசுபொருளாகியுள்ளது.
கோவை காரமடையில் கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர், ஒன்றிய செயலாளர் கருப்புசாமி மீது பாலியல் தொல்லை, சாதி ரீதியான அவமதிப்பு உள்ளிட்ட புகார்களை அளித்துள்ளார். இதனடிப்படையில் கருப்புசாமி உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மாவட்டச் செயலாளர் சத்யா மீது பெண் நிர்வாகிகள் புகார் தெரிவித்து கட்சி அலுவலகத்தைப் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இப்படி கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்கள் மீது புகார்கள் எழுந்து வரும் சூழலில், தற்போது சென்னையிலும் தவெக நிர்வாகிகள் தொடர்புடைய பாலியல் புகாரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து வெளியாகும் இந்த புகார்கள் கட்சி தலைமைக்கு புதிய சவாலாக மாறியுள்ளன...!!


Click it and Unblock the Notifications
