அமைச்சர் ஆனந்த்சர்மாவுடன் 150 பேர் பாகிஸ்தான் பயணம்

நாளை திங்கள்கிழமை முதல் 3 நாள் பயணமாக இக்குழு பாகிஸ்தான் செல்கிறது.
பாகிஸ்தானுக்கான பயணக் குழுவில் பார்தி நிறுவனம், ஹெரோ கார்ப்பரேட், மோடி எண்டர்பிரைசஸ், ஜெட் ஏர்வேஸ், பாரத் ஹோட்டல்ஸ், மகிந்திரா ஹாலிடேஸ் போன்ற பிரபல இந்திய நிறுவனங்களின் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பான FICCI-ன் தலைவர் கனோரியா, இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தலைவரான பி. முத்துராமன் ஆகியோர் இக்குழுக்களுக்கு தலைமை வகிப்பர்.
லாகூர், கராச்சி மற்றும் இஸ்லாமாபாத் செல்லும் இந்தியக் குழுவினர் பாகிஸ்தான் தொழிலதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
எதிர்வரும் 3 ஆண்டுகளில் இரு நாடுகளிடையே 10 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை எட்டும் வகையில் இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பயணம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள FICCI-ன் தலைவர் கனோரியா, பாகிஸ்தானுக்கான பயணம் என்பது வெறும் வர்த்தக ரீதியானது மட்டுமல்ல.. இருநாட்டு மக்களிடையே சுமூகமான உறவை வலுப்படுத்தவும் உதவும்" என்றார்.
இந்திய வர்த்தகக் குழுவினர் பாகிஸ்தான் பிரதமர் கிலானி மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் மக்தூம் ஆகியோரையும் சந்திக்க உள்ளனர்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே 2010-11ஆம் ஆண்டில் 2.7 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றிருந்தது. இந்தியாவிலிருந்து 2.3 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதியும் பாகிஸ்தானிலிருந்து 332 மில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதியும் நடைபெற்றது.
இந்தியாவிலிருந்து சர்க்கரை, பருத்தி. போன்றவையும் பாகிஸ்தானிலிருந்து தாது எரிபொருட்கள் போன்றவையும் இறக்குமதி செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications