கூர்க்காலாந்து பிரச்சனையில் இழுத்தடிக்கும் மத்திய அரசு- மமதா காட்டம்
கொல்கத்தா: டார்ஜிலிங்கில் கூடுதல் அதிகாரம் கொண்ட புதிய கூர்க்காலாந்து கவுன்சிலுக்கு அங்கீகாரம் அளிக்காமல் மத்திய அரசுதான் தாமதிக்கிறது என்று மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
கூர்க்கா முக்தி மோர்ச்சா அமைப்பின் பொதுச்செயலாளர் ரோசன் கிரி தலைமையிலான குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மமதா இதனைத் தெரிவித்துள்ளார்.
கூர்க்காலாந்து அமைப்பினருக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையே கூடுதல் அதிகாரம் கொண்ட கூர்க்காலாந்து கவுன்சில் அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதத்தில் கையெழுத்திடப்பட்டிருந்தது.
ஆனால் மத்திய அரசு உடனே இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கவில்லை. இது தொடர்பாக மாநில அரசிடம் பல்வேறு சந்தேகங்களை மத்திய அரசு கேட்டு வருகிறது.
இதனால் புதிய கவுன்சில் அமைப்பது நடைமுறைக்கு வரவில்லை. இதில் அதிருப்தி அடைந்த கூர்க்கா முக்தி மோர்ச்சா அமைப்பினர் மார்ச் 27-ந் தேதிக்குள் கூடுதல் அதிகாரம் கொண்ட புதிய கவுன்சிலை அமைக்க கெடு விதித்திருந்தனர்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் மமதா பானர்ஜி, இந்த விவகாரத்தில் மத்திய அரசுதான் தாமதிப்பதாகவும் போராட்டத்தை தொடங்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் கூர்க்கா முக்தி மோர்ச்சா அமைப்பின் பிரதிநிதிகளுடன் மமதா ஆலோசனை நடத்தினார்.
இந்த விவகாரம் குறித்து பிப்ரவரி 22-ந் தேதி பிரதமர் மன்மோகன்சிங்கை தாம் சந்திக்க உள்ளதாகவும் இதனால் போராட்டத்தை கைவிடுமாறும் இச்சந்திப்பின் போதும் மமதா வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பிப்ரவரி 28-ந் தேதி டார்ஜிலிங்க் நகரத்துக்கு பயணம் செய்ய இருப்பதாகவும் மமதா உறுதியளித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications