வாய் பேச முடியாதவரின் மனைவியை அபகரித்த எஸ்.ஐ.: மீட்டுத் தரக்கோரி புகார்
மதுரை: எஸ்.ஐ. பெருமாள்ராஜ் என்பவர் தனது மனைவியுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும், அவரிடம் இருந்து தனது மனைவியை மீட்டுத் தருமாறும் மதுரையைச் சேர்நத் வாய் பேச முடியாத மெக்கானிக் ஒருவர் தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாஸிடம் புகார் மனு அளித்துள்ளார்.
மதுரை செல்லூர் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் துரை. வாய் பேச முடியாத அவர் மெக்கானிக்காக உள்ளார். இந்த நிலையில் அவர் தென் மண்டல ஐ.ஜி ராஜேஷ்தாஸிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
நான் மதுரை செல்லூர் மீனாட்சிபுரத்தில் வசித்து வருகின்றேன். மெக்கானிக்காக பணிபுரிகிறேன். எனனால் வாய் பேச முடியாது. இந்த நிலையில் எனது மனைவி காளீஸ்வரியுடன் கடந்த 2009 ம் ஆண்டு முதல் எஸ்.ஐ. பெருமாள்ராஜ் என்பவர் தொடர்பு வைத்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றார்.
இதை அறிந்து இது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் என்னை தாக்கினார். எனவே, என்னைத் தாக்கிய எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவரிடம் சிக்கியுள்ள எனது மனைவியை மீட்டுத்தர வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு குறித்து விசாரணை நடத்துமாறு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் திருநாவுக்கரசுக்கு ஐ.ஜி. உத்தரவிட்டார். ஆனால் இந்த புகாரை பெருமாள்ராஜும், துரையின் மனைவி காளீஸ்வரியும் மறுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications