மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
சேலம்: சேலத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சேலம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அன்பழகன். கடந்த சில மாதங்களாக அவர் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
ஆனால் மாணவிகளின் எதிர்கால நலன் கருதி பெற்றோர் இது குறித்து வெளியில் கூற பயந்தனர். இதனையடுத்து அன்பழகன் தொடர்ந்து அநாகரீக செயலில் தைரியமாக ஈடுபட்டு வந்தார். இதனை மாவட்ட அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளிக்கப்பட்டது. முதல்வரின் தனிப்பிரிவின் புகாரின்பேரில் போலீஸ் அதிகாரிகள் மணிவிழுந்தான் அரசு பள்ளியில் விசாரணை நடத்தினர். இதில் அன்பழகன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதனால் அன்பழகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications