கத்தி முனையில் காதலனை கடத்தி திருமணம் செய்த 'புதுமைப் பெண்' கைது!
விருதுநகர்: காதலனை கத்தி முனையில் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ரைட்டன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (24). ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த பூவாணி கிராமத்தில் தலையாரியாக உள்ளார். வத்திராயிருப்பு அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (27). ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். முத்துலட்சுமியும், முத்துக்கிருஷ்ணனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் முத்துக் கிருஷ்ணனின் தந்தை பிலாவடியான அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்தார். இது குறித்து தகவல் அறிந்த முத்துலட்சுமி ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து நேற்று அவர் தனது உறவினர் காசி உள்பட 10 பேரை அழைத்துக் கொண்டு தனது காதலன் வேலை பார்க்கும் பள்ளிக்கு சென்றார். அங்கு முத்துக்கிருஷ்ணனிடம் நயமாகப் பேசி வெளியே அழைத்து வந்தார்.
வெளியே வந்தவுடன் அவரை கத்தியைக் காட்டி மிரட்டி ஆட்டோவில் ஏற்றி மேலத்தொட்டியபட்டிக்கு கடத்திச் சென்றனர். அங்கு முத்துக்கிருஷ்ணனுக்கும், முத்துலட்சுமிக்கும் திருமணம் நடந்தது. இது பற்றி அறிந்த பிலாவடியான் தனது மகனை தலையாரி கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக போலீசில் புகார் கொடுத்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவி செய்து முத்துலட்சுமி மற்றும் அவருடைய உறவினர் காசி ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் முத்துக்கிருஷ்ணனை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதை அவர் ஒப்புக கொண்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications