உ.பியில் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க காங்கிரஸை ஆதரிப்போம்-முலாயம் சிங்
ஹமீர்பூர்: ஒரு வேளை உ.பி சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சியமைக்கும் சூழல் உருவானால் அதைத் தடுக்க காங்கிரஸை ஆதரிக்கத் தயங்க மாட்டோம் என்று கூறியுள்ளார் சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்.
இதுகுறித்து ஹமீர்பூர் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், சமாஜ்வாடிக் கட்சிக்கு ஆதரவாக இன்று அலை வீசிக் கொண்டிருக்கிறது. அடுத்த அரசை அமைக்கப் போவது எங்களது கட்சிதான். ஒருவேளை பாஜகவுக்கு ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டால் அதை எங்களது கட்சி தடுக்கும். அதற்காக காங்கிரஸை நாங்கள் ஆதரிப்போம். மதவாத சக்திகளிடம் ஆட்சி போக விட மாட்டோம் என்றார் முலாயம் சிங்.
முலாயமின் இந்த திடீர் பேச்சு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு அவர் காங்கிரஸுடன் கை கோர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கவனத்துடன் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரேணுகா செளத்ரி கூறுகையில், இப்போது இந்த கேள்வியே தேவையில்லாதது. பொறுத்திருந்து பார்ப்போம் என்பது மட்டுமே இப்போதைக்கு எங்களது பதில். காங்கிரஸ் சமாஜ்வாடி இடையே எந்தவிதமான ஒப்பந்தமும் தேர்தலுக்கு முன்பு மேற்கொள்ளப்படவில்லை. மேலும் தேர்தலுக்குப் பிந்தைய சூழல் குறித்து எங்களிடம் இப்போது எந்த சிந்தனையும் இல்லை. தேர்தலும் முழுமையாக முடியவில்லை.
மேலும் இந்தக் கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறதா, இல்லையா என்பது குறித்து கருத்துக் கூறும் அதிகாரமும் எனக்கு இல்லை.
முலாயம் சிங்கின் பேச்சைப் பார்க்கும்போது அவருக்கு தேர்தலில் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்பதை அவரே ஒத்துக் கொள்வது போலத்தான் உள்ளது என்றார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications