சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: வீடியோ கேமரா மூலம் வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு
நெல்லை: சங்கரன்கோவில் இடைதேர்தலுக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடியோ கேமரா பொருத்தி கண்காணிக்க தமிழக சிறப்பு தலைமை தேர்தல் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
சங்கரன்கோவில் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக சிறப்பு தலைமை தேர்தல் அலுவலர் ராஜேந்திரன் நெல்லையில் ஆலோசனை நடத்தினார்.
அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் வருமாறு,
சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக 242 வாக்குச்சாவடிகள் அமைப்படுகின்றன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும். பதற்றமான வாக்குட்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை அமுல்படுத்த வேண்டும். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்ய வேண்டும். அமைதியான முறையில் தேர்தல் நடத்த அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கூறப்பட்டது.












Click it and Unblock the Notifications