20ல் மின்வெட்டைக் கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்: ஜி.கே. மணி அறிவிப்பு
நெல்லை: தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டைக் கண்டித்து பாமக சார்பில் வரும் 20ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டைக் கண்டித்து பாமக சார்பில் வரும் 20ம் தேதியன்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் மின்சாரம் வழங்க முன்வர வேண்டும். தமிழகத்தில் மின் உற்பத்தியை பெருக்கவும், செயல்படாமல் இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களை திறக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 8 முதல் 12 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகின்றது. இதனால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பல தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications