சேலம் அருகே அரசு பஸ் மீது டாடா சுமோ கார் மோதி 3 விவசாயிகள் பலி
சேலம்: சேலம் அருகே அரசு பஸ் மீது டாடா சுமோ கார் மோதிய விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 3 விவசாயிகள் பரிதாபமாக பலியாகினர், 3 பேர் காயமடைந்தனர்.
சேலம்-நாமக்கல் 4 வழிச்சாலையில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் வழியில் திடீரென நின்றது. அப்போது பஸ்சை பின் தொடர்ந்து வந்த டாடா சுமோ கார் டிரைவர் இதனை கவனிக்கவில்லை. இதனால் டாடா சுமோ பஸ்சின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பஸ்சில் உழவர் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு சென்ற விவசாயி மாணிக்கம்மாள்(50) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் படுகாயமடைந்த மணி, சம்பூரணம் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் பலியாகினர். மேலும் தனம், சின்னப்பிள்ளை, சரவணன் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர்.
பஸ் நிறுத்தம் இல்லாத இடத்தில் அரசு பஸ் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றியதே இந்த விபத்திற்கு காரணம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications