சிறுதாவூர் பங்களாவுக்கு முதல்வர் ஜெயலலிதா 'விசிட்'

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் உள்ள பங்களாவுக்கு அடிக்கடி சென்று ஓய்வெடுப்பது முதல்வரின் வழக்கம். அவர் அங்கு செல்லும்போதெல்லாம் தோழியாக இருந்த சசிகலாவும் உடன் செல்வார். அதேபோல கொடநாடுஎஸ்டேட்டுக்கும் அடிககடி செல்வார் ஜெயலலிதா.
சில மாதங்களுக்கு முன்பு கூட அவர் கொடநாடு செல்வதாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் சசிகலா குடும்பத்தினரின் திடுக்கிடும் செயல்பாடுகள் குறித்து அவருக்குத் தெரிய வந்ததால் அங்கு போகவில்லை. மாறாக சென்னையிலேயே தங்கியிருந்து சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டும் தனது வீட்டை விட்டும் விரட்டும் பணியில் ஈடுபட்டார். அதன் பிறகு ஓய்வேயில்லாமல் பணியாற்றி வந்தார் ஜெயலலிதா.
இந்த நிலையில் நேற்று மாலை ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவுக்கு வருகை தந்தார். அங்குதான் தங்கியுள்ளார். சில நாட்கள் வரை அவர் அங்கு தங்கியிருப்பார் என்று தெரிகிறது. அதன் பின்னர் தனது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு விட்டு பின்னர் சங்கரன்கோவிலுக்குப் புறப்பட்டுச் சென்று தீவிரப் பிரசாரத்தில் அவர் ஈடுபடத் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications