தலைசிறந்த கைவினைக் கலைஞர்களுக்கான தேசிய விருது போட்டி: விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி: சிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு தேசிய விருது அளிப்பதற்காக நடத்தப்படும் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் கலைஞர்கள் வரும் மே 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் கைவினைப் பொருட்கள் அபிவிருந்தி துறை சார்பில் ஆண்டுத்தோறும் தலைசிறந்த கைவினைக் கலைஞர்களுக்கான தேசிய விருது போட்டி நடத்தப்படுகின்றது. அதன் மூலம் தேர்வு செய்யப்படுவர்களுக்கு விருது வழங்கப்படுகின்றது.
இப்போட்டியில் வெற்றி பெறும் கைவினைக் கலைஞர்களை கவுரவப்படுத்தும் வகையில் மத்திய அரசின் தாமிரபத்திரம், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் அங்கவஸ்திரம் ஆகியவை வழங்கப்படும். தேசிய மெரிட் சான்றிதழ் பெறுபவருக்கு ரூ.50,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படுகின்றது.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் கைவினைக் கலைஞர்கள் தங்களது அரிய படைப்பை உரிய விண்ணப்பத்துடன்,
உதவி இயக்குநர் (கைவினைப் பொருட்கள்),
கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் சேவை விரிவாக்க மையம்,
எண். 14, பொன் நகர் மெயின்ரோடு,
ரெட்டியார்பாளையம்,
பாண்டிச்சேரி - 605 010,
தொலைபேசி எண் : 0413 - 2206615.
என்ற முகவரியில் அல்லது மாவட்ட தொழில் மைய பொது மேலாளரிடம் 21.5.2012 க்குள் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் கைவினைக் கலைஞர்கள் தமது அரிய படைப்பின் பணி மேற்கொள்ளும் சமயத்தில் மேற்கண்ட முகவரியில் தெரிவித்தால், தங்கள் படைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்து சான்று அளிக்க ஏதுவாக இருக்கும். மேலும் தேவைப்பட்டால் தக்க ஆலோசனை வழங்கப்படும் என்று கைவினைப் பொருட்கள் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications